follow the truth

follow the truth

November, 14, 2024
HomeTOP2பொதுத் தேர்தல் - முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று(10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பானவை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நேற்று (10) வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2811 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2,162 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 649 முறைப்பாடுகளின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலும் பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியது

இலங்கையிலுள்ள தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது. முன்னதாக அருகம்பைப் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை...

தேர்தல் விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை

தேர்தல் விதிகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. தேர்தலில் வாக்குச்சீட்டை...

இன்று சேவையில் ஈடுபடவிருந்த சில ரயில்கள் இரத்து

ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து...