follow the truth

follow the truth

November, 14, 2024
HomeTOP2மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

Published on

உக்ரைன் இன்று (10) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மோதல்கள் தொடங்கிய பின்னர் உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய ஆளில்லா விமான தாக்குதல் இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

32 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது, அவற்றை சுட்டு வீழ்த்த ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாஸ்கோவின் ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ள 03 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

எவ்வாறாயினும், ட்ரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரையிலான தேர்தல் வாக்களிப்பு வீதம்

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையில் கொழும்பு - 20% யாழ்ப்பாணம் -...

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர்...

வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பணம் பெற்ற இருவர் கைது

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி Eazy Case ஊடாக வைத்தியர்களிடம்...