வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, தமது வாக்கினை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே 14ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.