முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய ஜீப் வண்டி தொடர்பான விசாரணை தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரின் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாவாகும் என்பதால், சம்பந்தப்பட்ட காரை அவரது சாரதி ஒருவரினால் பொலிஸ் பாதுகாப்பில் அரசாங்க பரிசோதகரிடம் எடுத்துச் செல்லுமாறு சுஜீவ சேனசிங்கவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்தது.