follow the truth

follow the truth

November, 8, 2024
Homeலைஃப்ஸ்டைல்முகம் வறட்சி நீங்கி மென்மையாக்க உதவும் ஃபேஸ் பேக்

முகம் வறட்சி நீங்கி மென்மையாக்க உதவும் ஃபேஸ் பேக்

Published on

நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

சிலருக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு சோர்வாகவும், பொலிவில்லாமலும் தோற்றமளிக்கும்.

இதனால் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள்.

ஆனால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் இதனை சரி செய்து விடலாம். முகம் வறட்சியாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

காபி பவுடர்

காபி பவுடர் வைத்து முகத்தை ஸ்கிரப் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு டீஸ்பூன் அளவு காபி பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் வருடத்திற்கு புற்றுநோயால் இறப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 19,000ஐத் தாண்டியுள்ளது

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு...

மெக்டோனல்ஸ் பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு

அமெரிக்கா மெக்டோனல்ஸில் விற்கப்பட்ட பர்கர் சாப்பிட்டதால் ஈ.கொலி கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 13 மாநிலங்களில்...

உலகப்புகழ் பெற்ற TARZAN காலமானார்

உலகப்புகழ் பெற்ற TARZAN வேடத்தில் நடித்த அமெரிக்காவின் மூத்த நடிகர் Ron Ely காலமானார். Ron Ely இறக்கும் போது...