ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி என்றும், அந்த கட்சியில் ஊழல்வாதிகள் இல்லை என்றும், அதற்கிணங்க கட்சியின் சலூன் கதவுகள் மூடப்பட்டுள்ளது என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
எனவேதான் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் தமது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகவும், அந்த வேட்பாளர்களில் பெருமளவானோர் இவ்வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமது கட்சி நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வரும் நிலையில், பெருந்தொகையான மக்கள் கட்சிக்கு ஆதரவளித்து வருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
D.K.W கலாசார மண்டபத்திற்கு வந்த ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்க பெருமளவான மக்கள் மண்டபத்தில் கூடியிருந்தனர்.
இந்த சந்திப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.