follow the truth

follow the truth

November, 8, 2024
HomeTOP1சுமார் 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

சுமார் 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

Published on

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பேராசிரியர் மொஹமட் மஹீஷ் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சர் விஜித திடீரென துறைமுகத்திற்கு விஜயம்

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் துறைமுகத்திற்கு...

திரிபோசா நிறுவனத்தை மூட அரசு காய் நகர்த்துகிறது

இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட...

கொரிய அரசினால் இலங்கைக்கு நிதியுதவி

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இதன்படி,...