அடுத்த வருடம் முதல் ஏழு வகை விதைகளின் இறக்குமதியை வரையறுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சின்னவெங்காயம், உளுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளை இறக்குமதி செய்வதை வரையறுப்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா அரச விவசாய பண்ணையில் உருளைக்கிழங்கிற்கான விதை உற்பத்தி முன்னெடுக்கப்படுவதுடன், சின்ன வெங்காயம், உழுந்து, நிலக்கடலை மற்றும் சோள விதைகளுக்கான உற்பத்தியும் வெற்றிகரமாக இடம்பெறுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.