follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉலகம்பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்?

பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்?

Published on

கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர்  அமைச்சர் ஒருவர் உட்பட அதிகாரிகள் பலரை சுட்டுக்கொலை செய்தனர்.

அதன் பின்னர் அந்நாட்டுப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தன. இதனால் சில பிரதமர்கள் அங்கு  தங்குவதை தவிர்த்து வந்தனர்.

குறிப்பாக கடந்த 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே மற்றும் அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் பலரும் பிரதமரின் உத்தியோக இல்லத்தில் தங்குவதை தவிர்க்கும்படி கூறினர்.

ஆனால் அதையும் மீறி புமியோ கிஷிடோ அண்மையில்  பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்கு குடி பெயர்ந்தார்.

இந்நிலையில் அங்கு முதல் நாளை எப்படி கழித்தீர்கள் ?என பிரதமரிடம்  நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு  “நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவுக்கான உணவு இறக்குமதியை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது

காஸா பகுதிக்கு உணவு வழங்குவதை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதிக்கு உணவுகளை வழங்கும்...

சின்வார் கொலை – இஸ்ரேலை மிரட்டும் ஹிஸ்புல்லாஹ்

பலஸ்தீன ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறைக்கு...

“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா...