காத்தான்குடியைச் சேர்ந்த கண் பார்வை திறனற்ற சிறுவன், அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்திருந்தமை குறித்து நாம் உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.
இரண்டு கண்களும் பார்வை திறனற்ற முக்பில் சினான் என்ற 12 வயது சிறுவனே அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்.
இன்று சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தில் தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி முன்னிலையில் முக்பில் சினானுக்கு வெற்றியையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கௌரவிக்கப்பட்டார்.
His Excellency Ambassador Khalid bin Hamoud Alkahtani honored today at the Embassy, Master/ Mukbil Sinan, who completed memorizing the Holy Quran at the age of twelve, wishing him success and good luck. pic.twitter.com/IE24xLgkBq
— السفارة في سريلانكا (@KSAembassylk) November 5, 2024
இவர் புதிய காத்தான்குடி இலக்கம் 01, பதுரியா மத்ரஸாவில் பகுதி நேர ஹிப்ழ் பிரிவில் செவிப்புலன் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்து வந்த இவர். இப்போது அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார்.
பல சிரமங்களுக்கு மத்தியில் அல்குர்ஆனின் உள்ள 114 சூராக்களையும் மனனம் செய்து முடிக்க அல்லாஹ்வின் உதவியுடன் மத்ரஸா முஅல்லிம்களின் சிறப்பான வழிகாட்டலில் இந்த சிறுவனுக்கு மூன்றரை வருடங்கள் மாத்திரமே போதுமானதாக இருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.