உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வாக்களிக்கும் வசதி உள்ளதால் சில வாரங்களுக்கு முன்னரே தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் சுமார் 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி மாகாணங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முந்தைய வாக்கு பதிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக குடியரசு கட்சியின் வேட்பாளர் டோனல் டிரம்ப் குற்றம்சாட்டி இருப்பதாய் அடுத்து குழப்பங்களை தடுக்க அமெரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் கணக்கிடப்படும்.