follow the truth

follow the truth

November, 5, 2024
HomeTOP1மின்கட்டண குறைப்பு போதுமானதாக இல்லை - புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

மின்கட்டண குறைப்பு போதுமானதாக இல்லை – புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

Published on

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனையை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனையில் கட்டண திருத்த விலை சூத்திரத்துடன் இணங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறித்த அறிவித்தல் மின்சார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல்...

புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில்...