பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பு தீர்மானித்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக கட்சியின் ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இருபத்தைந்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடற்றொழில் அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்களை மீள அமுல்படுத்துவதற்கு ஊடக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.