இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் நெருக்கடியை தவிர்க்க இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாட்டில் நீண்டகாலமாக நிலவும் டொலர் தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.