follow the truth

follow the truth

November, 29, 2024
HomeTOP1தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

Published on

நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தேர்தல் திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சேதமடைந்த விளைநிலங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு

அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி...

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28)...

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை...