எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் முப்படையினரின் உணவுப் பொருட்களையும் இணைப்பதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உணவுக்காக வழங்கும் தொகையை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என முப்படை வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் வழங்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஆயுதப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் சம்பளத்தை தற்போதைய பொருளாதாரத்திற்கு ஏற்ப அதிகரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தற்போதைய சம்பள முறைமையில் திருத்தம் செய்ய பிரமித பண்டார தென்னகோன் அப்போது தீர்மானித்திருந்தார்.
இதன்படி தற்போதைய அரசாங்கம் தேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய முப்படையினரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டுமென பிரமித பண்டார தென்னகோன் கேட்டுக்கொள்கிறார்.
இது தொடர்பில் தாம் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதாக பிரமித பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.