தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்ததன் காரணமாக நேற்று பல்வேறு இடங்களில் காற்றின் தர குறியீடு மோசமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று தரக் குறியீடு 100க்கு மேல் உள்ள பகுதிகளில் ஆஸ்துமா, இதய நோயாளிகள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதும், காற்று தரக்குறியீடு 200 க்கு மேல் உள்ள பகுதிகளில் பெரும்பாலானோருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.