follow the truth

follow the truth

October, 30, 2024
HomeTOP1தபால் மூல வாக்கெடுப்பு இன்று

தபால் மூல வாக்கெடுப்பு இன்று

Published on

பொதுத் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றுடன், நவம்பர் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பை குறிக்கவும் உரிய அலுவலகங்கள் அவகாசம் வழங்கியுள்ளன.

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய நாட்களில் தபால் வாக்களிக்க முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் வாக்கினைக் குறிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என திரு சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்தப்பட்ட தபால் வாக்கு கையிருப்பு பொதிகளை இன்று முதல் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஏறக்குறைய ஆயிரம் அதிகாரிகளை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்

இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்...

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைதியான சூழலைப் பேணுங்கள்”

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

ரஞ்சனின் வேட்புமனுவை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான உத்தரவு

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட கம்பஹா மாவட்டத்திற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்...