மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார சட்டத்தை தயாரிக்கும் போது, வலுசக்தி சுயாதிகாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைச் சுட்டிக்காட்டினார்.
செயற்திறனின்மை மற்றும் ஊழியர்கள் முகாமைத்துவம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க இருப்பதாகவும் செயற்திறன் மிகுந்த பொதுச் சேவையை முன்னெடுப்பதற்கு மின்சார சபைக்கு தேவையான மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாசநாயக்க தெரிவித்தார்.
அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.