ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என்றார்.
போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் அரண்மனை மாணவர்களால் சூறையாடப்பட்டது.
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.