follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP2ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் பெயரிலான ட்விட்டர் முடக்கம்..

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் பெயரிலான ட்விட்டர் முடக்கம்..

Published on

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக நாடுகளும் அஞ்சுகின்றன. இதற்கிடையே இரண்டு போஸ்ட்டிற்கு பிறகு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகெங்கும் உள்ள முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் தாங்கள் சொல்ல வரும் கருத்துகளைப் பதிவு செய்ய சமூக வலைத்தளங்களையே தேர்வு செய்கிறார்கள்.

குறிப்பாக பல்வேறு மொழிகளைப் பேசுவோருக்கும் தங்கள் கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காகப் பல மொழிகளிலும் சமூக வலைத்தள கணக்குகளைத் தொடங்குகிறார்கள். அதன்படி ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ஹீப்ரு மொழியில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. இருப்பினும், வெறும் இரண்டே இரண்டு போஸ்ட்களுக்கு பிறகு அந்த பக்கம் இப்போது முடக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சர்ச்சையாகவே இப்போது வெடித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அந்த பக்கத்தில் ஹீப்ரு மொழியில் முதல் போஸ்ட் வந்தது. கருணைமிக்க அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டும் அந்த போஸ்ட் இருந்தது. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, “யூத ஆட்சியாளர்கள் (இஸ்ரேலை சொல்கிறார்) தவறு செய்துவிட்டனர். ஈரான் தொடர்பாக அவர்களின் கணக்கு தப்பாகிவிட்டது. ஈரானின் சக்தி, திறன், முன்முயற்சி, விருப்பம் என்ன என்பதை நாங்கள் காட்டுவோம்” என்று இரண்டாவது போஸ்ட் இருந்தது.

கடந்த வாரம் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த போஸ்ட் வந்துள்ளது. இருப்பினும், இந்த இரண்டு போஸ்ட்களுக்கு பிறகு அந்த பக்கம் முடக்கப்பட்டது. அயதுல்லா அலி கமேனிக்கு ஹீப்ரு மொழியில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, இரண்டு போஸ்ட்களில் முடக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

அதேநேரம் கமேனி தனது வழக்கமான பக்கத்திலேயே அடிக்கடி ஹீப்ருவில் பதிவிடுவார். பெரும்பாலும் அவர் இஸ்ரேலை மிகக் கடுமையாக விமர்சிக்கும் வகையிலேயே கருத்துகளைப் பதிவிடுவார். இந்த நேரத்தில் அயதுல்லா அலி கமேனியின் புதிய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதற்காக அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இஸ்ரேலை அச்சுறுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதற்காகவே அந்த கணக்கு முடக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதை ட்விட்டர் நிறுவனம் சார்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.

முன்னதாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், வான் பாதுகாப்பு அமைப்பு தங்களைப் பாதுகாத்ததாகவும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஈரான் கூறியிருந்தது. இருப்பினும், ஈரான் தங்கள் இமேஜை பாதுகாத்துக் கொள்ளவே இப்படிச் சொல்வதாகவும் தாக்குதலில் சேதம் கணிசமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு எப்போது வேண்டுமானாலும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றே அஞ்சப்படுகிறது. அப்படி ஈரான் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலும் திரும்பத் தாக்கும். இதனால் மத்திய கிழக்கில் பிராந்திய போரே வெடிக்கும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. இதன் காரணமாகவே இரு தரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த உலக நாடுகள் முயன்று வருகின்றனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு நிவாரணம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 4...

மீண்டும் ரயில் தடம்புரள்வு – ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (28)...

ஜப்பான் தேர்தல் – பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி

ஜப்பான் பொதுத் தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என சர்வதேச செய்திகள்...