follow the truth

follow the truth

November, 6, 2024
Homeஉள்நாடுசிறுவர்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

சிறுவர்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

Published on

இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281வது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் மரண தண்டனையை விதிக்க கூடாது

இதற்கு பதிலாக ஜனாதிபதி விரும்பும் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 18 வயதுக்குக் குறைவாக இருப்பின் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்படவில்லை.

அதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த யோசனை...

ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு

ஹாலிஎல - வெலிமடை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம்...

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர்

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(05) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வங்கியின் புதிய தலைவராக...