follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP1பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்

பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்

Published on

ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணி உணவு பார்சலை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வாமையினை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவுப் பொதியினை மேலும் மூவருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால், அந்த உணவை சாப்பிட்டதும் சிறுமிக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவரின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் வைத்து உண்ணப்பட்டதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானத்தை சட்டப்படியே செய்தோம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக தாம் சமர்ப்பித்த பத்திரத்தை அமைச்சரவை நிராகரித்தால், அந்த பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்...

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்

இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாதுகாப்பு...