உடனடி போர் நிறுத்தத்தின் மூலம் காஸா எல்லைகளில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளைத் திறம்பட வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
எல்லைகளைக் கடந்து அமைதி தேவை என பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தினார்.
காஸாவில் மாத்திரமல்லாமல் லெபனானிலும் உக்ரைனிலும் அமைதி திரும்ப வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 -ஐ லெபனானில் அமுல்படுத்துவதை நோக்கி நாம் நகர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றிருந்தனர்.a