follow the truth

follow the truth

October, 25, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று(25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தூதுவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகள் மற்றும் நீண்டகால கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்த மியன்மார் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் குறிப்பிட்டார்.

விவசாயம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் மலர் தான் டைக் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள்...

எந்தவொரு வியாபாரியும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது

அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு...

தம்புள்ளை சுற்றுலாத்தளங்களுக்கு விசேட பாதுகாப்பு

தம்புள்ளை நகரிலும், தம்புள்ளையைச் சூழவுள்ள சுற்றுலாப் பகுதிகளிலும் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை,...