இலங்கைக்கு 5 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் கன்னி விக்னராஜா, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை நடத்தினார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உலகளாவிய அபிவிருத்தி திட்ட நிதியளிப்பு தொடர்பான தகவல்களை அவர் பசில் ராஜபக்சவுடன் பகிர்ந்துக்கொண்டார்.
மேலும் தமது இலங்கை பயணத்தின்போது அரசாங்க மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களையும் கன்னி விக்னராஜா சந்திக்கிறார்.