follow the truth

follow the truth

October, 25, 2024
Homeஉள்நாடுகொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

Published on

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவு காரணமாக கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய பிராந்திய தபால் அத்தியட்சகர்களின் மேற்பார்வையில், உரிய தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களின் அடிப்படையில்...

ரயில்வே ஊழியர்களுக்கு இலவச ரயில் அனுமதிச் சீட்டு

அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்...

ஜனாதிபதி மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான...