தென்னை பயிர்ச்செய்கை சபையினால் மஹரகம நகரில் இன்று (25) குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒருவருக்கு தலா 05 தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை சுமார் 5,000 தேங்காய்களை 100 முதல் 120 ரூபா வரை விற்பனை செய்ய மஹரகமவில் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர புத்தளம், குருநாகல் தோட்ட நிறுவனம் மற்றும் தென்னை ஆராய்ச்சி சபை என்பனவும் நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றன.