follow the truth

follow the truth

October, 25, 2024
Homeஉலகம்மலேரியா இல்லாத நாடாக எகிப்து - WHO சான்று

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

Published on

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. மலேரியா நோயை அழிக்க சுமார் நூறாண்டு கால முயற்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எகிப்து பழமையான நாகரிகத்தை கொண்டுள்ள நாடான போதிலும், மலேரியா நோய்க்கும் அங்கு நீண்ட வரலாறு உள்ளது. என்றாலும் இனி எகிப்தில் மலேரியா ஒரு கடந்த கால வரலாறாக மாத்திரமே இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எகிப்துடன் சேர்த்து உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அத்தாட்சிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களாவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரிய இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும்...

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள்...

இஸ்ரேல் திண்டாட்டம் : டெலிகிராம் மூலம் வேலையை காட்டிய ஈரான்

பொதுவாக உலக அளவில் வலிமையான உளவாளிகளை கொண்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலின் மொசாத் அமைப்பு.. உலகிலேயே டாப் உளவாளிகளை...