follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1எரிவாயு தரம் குறைந்ததால் அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை !

எரிவாயு தரம் குறைந்ததால் அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை !

Published on

 

(UPDATE)  லிட்ரோ நிறுவனத்துக்கு சமையல் எரிவாயு ஏற்றி வந்துள்ள கப்பலில் காணப்படும் எரிவாயுவில் “ எதில் மகெப்டான்” என் இரசாயன பொருளின் உரிய தரம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த எரிவாயுவை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தரமற்ற சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகித்ததன் ஊடாக ஏற்பட்ட அனர்த்தங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

இந்த வழக்கு அடுத்த வாரம் தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது அதிகார சபையால் முன்னெடுக்க கூடிய சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

——————————————————————————————

லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை, தர நிர்ணயம் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இன்று காலை நடத்தவுள்ள சந்திப்பை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த எரிவாயு கப்பலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அறிக்கைகள் இன்று காலை கிடைக்க பெறவுள்ளன.

இதன்பின்னரே, குறித்த எரிவாயு தரமானதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

குறித்த கப்பலில் அடங்கியுள்ள எரிவாயு தரம் குறைந்ததாயின் அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சமையல் எரிவாயுவில், மணத்தை அறிந்துகொள்ளும் பதார்த்தமான, எ(த்)தில் மேகெப்டனின் அளவு, 14 க்கும் 15க்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற போதிலும், அதற்கும் குறைந்த மட்டத்திலேயே அது இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம், ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதங்கள் 29க்கு 69 என்ற அடிப்படையில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுயாதீன நிறுவனத்தின் பரிசீலனையின்படி, இந்த எரிவாயுவில் 33 சதவீத ப்ரொப்பேன் அடங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முன்தினம் 3,700 மெற்றிக் டன் அடங்கிய எரிவாயு கப்பல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, அதிகாரிகள் அந்த எரிவாயுவின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீர்த்தேக்கப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் விடுமுறைகள் இரத்து

நிலவும் கடும் மழையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும்...

சீரற்ற காலநிலை : தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (27)...

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம்...