follow the truth

follow the truth

October, 23, 2024
HomeTOP1அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

Published on

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா, புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அருகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்வதால் (Surfing season)இஸ்ரேலியர்கள் அதிகம் சுற்றித்திரிவதாகவும் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

இதன்போது, ​​ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அந்த அருகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் நிறுவிய கட்டிடம் உள்ளது. ஒருவித மண்டபம் போன்ற இடம். இஸ்ரேலியர்கள் அருகம்பே பகுதிக்கு அடிக்கடி ஈர்க்கப்படுகிறார்கள். பொத்துவில் மற்றும் அருகம்பே. குறிப்பாக சர்ஃபிங் செய்வதால். இஸ்ரேலியர்கள் அந்த பகுதியை விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் அங்கு இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று சில தகவல்கள் கிடைத்தன. அதனால்தான் அந்த பகுதிக்கு சாலை தடுப்புகளை வைத்து அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க...

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள்...

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை

அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும்...