பென்சில்வேனியா மாகாணத்திற்கு சென்ற டொனால்ட் டிரம்ப் ஒரு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் தாயரித்துக் வாடிக்கையாளா்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
அமெரிக்க மக்களின் விருப்பத்துக்குரிய மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.