follow the truth

follow the truth

October, 21, 2024
Homeஉள்நாடுஉச்சம் தொட்ட பாக்கு விலை

உச்சம் தொட்ட பாக்கு விலை

Published on

இந்த நாட்களில் வவுனியாவில் பாக்கு விலை அதிகரிப்புடன், வெற்றிலை ஒன்றின் விலையும் 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.

4 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும், பெரிய பாக்கு ஒன்று 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வரும் பழுக்காத பாக்குகளை இரசாயனம் தடவி பழுத்த பாக்குகளாக சந்தைக்கு விநியோகம் செய்யும் கொள்ளையொன்று அம்பலமாகியுள்ள நிலையில், வவுனியா மக்களும் வியாபாரிகளும் யாழ்ப்பாண பாக்குகளை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

பாக்கு விலை உயர்வு மற்றும் பாக்கு தட்டுப்பாடு காரணமாக 50 ரூபாயாக இருந்த வெற்றிலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சூப்பர் வெற்றிலை என அழைக்கப்படும் வெற்றிலை பாக்கு பொதி ஒன்றின் விலை 200 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், அதில் வெற்றிலை பாக்கு உள்ளடங்களாக பல பொருட்களை உள்ளடக்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு – பெப்ரவரி மாதம் விசாரணைக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு மனுவை 2025 ஆம் ஆண்டு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வாகனங்களில் ஒரு...