follow the truth

follow the truth

October, 21, 2024
HomeTOP1உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நேற்று (20) தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கவனம் செலுத்தப்பட்டது.

நாங்கள் பொலிஸ் திணைக்களத்தை விசாரணைக்கு ஏற்ற துறையாக மாற்றினோம். இதனால் பலர் தற்போது குழம்பியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தவர்கள் இன்று 5 ஆண்டுகளுக்கு பின்னரே விழித்துள்ளனர்.

இப்போது அந்த அறிக்கையை கொடு, இந்த அறிக்கையை கொடு என்கிறார்கள். அந்த இரண்டு அறிக்கைகளும் ரணில் விக்கிரமசிங்கவின் அறிக்கைகள்.

அது இரண்டும் விசாரணைக் குழுக்கள் அல்ல. நான் வந்ததும் அந்த அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டேன்.

இந்த விசாரணையை நசுக்கவே ரணில் விக்கிரமசிங்க விரும்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளோம்.

அதனை நசுக்குவதற்கும், சுருக்குவதற்கும். கோமாவில் இருந்தவர்கள் தற்போதே விழித்துள்ளனர்.

இந்த நபரின் தலையீடு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அல்ல.
எனவே, நாங்கள் அவர்களுக்கு அடிபணிய மாட்டோம், அதில் சிக்கிக்கொள்ளவும் மாட்டோம்.

நியாயமான விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவோம். நாம் எதை மறைக்க வேண்டும்? யாரை காப்பாற்ற வேண்டும்?

தேசிய மக்கள் சக்தியான நாங்கள் மூழ்கும் வாளிக்காக தடுமாறவும் மாட்டோம், வாளியை மூழ்கடிப்பவர்களுக்கு இடமளிக்கவும் மாட்டோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உச்சம் தொட்ட பாக்கு விலை

இந்த நாட்களில் வவுனியாவில் பாக்கு விலை அதிகரிப்புடன், வெற்றிலை ஒன்றின் விலையும் 150 ரூபாவாக அதிகரித்துள்ளது. 4 ரூபாவாக இருந்த...

“ஈஸ்டர் தாக்குதல் பற்றி ரவி செனவிரத்னவுக்கு தெரியும்”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி...

கோட்டையிலிருந்து மருதானை வரை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்

கோட்டை புகையிரத நிலையத்தின் புகையிரத சுவிட்ச் (Railroad Switch) பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மருதானை நோக்கி...