follow the truth

follow the truth

October, 21, 2024
HomeTOP2"பெரிய தப்பு பண்ணிட்டாங்க.." - கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

“பெரிய தப்பு பண்ணிட்டாங்க..” – கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

Published on

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரித்துள்ள நெதன்யாகு, “மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள்” எனவும் இஸ்ரேல் மக்களை துன்புறுத்த முயற்சித்தால் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் ஹமாஸ் அமைப்பினர் முன்னெடுத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், 250 பேரை பணையக்கைதிகளாகவும் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.

இதனால், கோபம் அடைந்தத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறி முழு அளவிலான போரை அறிவித்தது. அப்போது முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதராவக லெபானானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல, காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். இதனால், ஹமாஸ் அமைப்பினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிசேரியாவில் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில், வீட்டின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு இது குறித்து தெரிவிக்கையில்;

“என் மீதும், எனது மனைவி மீது நடைபெற்ற கொலை முயற்சி மிகப்பெரும் தவறான செயலாகும். இப்படி செய்வதால் என்னையோ இஸ்ரேல் முன்னெடுத்து வரும் எதிரிகளுக்கு எதிரான சண்டையை முடக்கி விடாது. இஸ்ரேல் மக்களை துன்புறுத்த யாராவது முயற்சித்தால் கடும் விலையை கொடுக்க நேரிடும்.

காசாவில் இருந்து எங்களின் பணையக்கைதிகளை நாங்கள் மீட்போம். வடக்கு எல்லையில் வசித்த எங்கள் நாட்டு மக்களுக்கு அவர்களின் வீடுகளை பத்திரமாக திரும்பி ஒப்படைப்போம். போர் தொடர்பான எங்களின் எல்லா இலக்குகளையும் பூர்த்தி செய்ய இஸ்ரேல் உறுதியாக உள்ளது. எதிர்கால தலைமுறைகளுக்கு நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரத்தை மாற்றுவோம். பயங்கரவாதிகளையும் அவர்களை அனுப்புவர்களையும் தொடர்ந்து நாங்கள் ஒழித்து கட்டுவோம்..” என அவர் அதில் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எரிபொருள் விற்பனையில் எனது பொக்கட்டுக்குள் சென்ற பணம் தற்போது அநுர திஸாநாயக்கவின் பொக்கட்டுக்கு செல்கிறது”

தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் தனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக அன்று...

“திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை”

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு...

இந்த வருட பொதுத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவின் டார்கட் இளைஞர் குழு

பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு வியூகக் குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...