follow the truth

follow the truth

October, 21, 2024
HomeTOP1கம்மன்பிலவிடமிருந்து மீண்டும் சவால்

கம்மன்பிலவிடமிருந்து மீண்டும் சவால்

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21) காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுமாறு நான் ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த நேரம் நாளை காலை 10 மணியுடன் முடிவடைகிறது.

இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் நாளை காலை 10 மணி வரை அவகாசம் உள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, நாளை காலைக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர்...

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம்...

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பதே என இலங்கை தொழிலாளர்...