follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

Published on

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ,

மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு மேல்மாகாண ஆளுநருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

இந்த வருடத்தில் ரயில்களில் மோதி 07 யானைகள் பலி

இந்த வருடத்தில் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வருடத்தில் மட்டும் 24 யானைகள் ரயிலில்...