‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
‘தலைவரிடம் சொல்லுங்கள்’ Talk to Chairman “ என்ற இத்திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் அதில் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படுவதுடன் முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அத்துடன் 0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடுகளை அனுப்புவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.