பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.
அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இடைக்கால பயிற்சியாளராக இருப்பார்.
கடந்த பெப்ரவரியில், பங்களாதேஷின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இரண்டாவது முறையாக அணியில் இணைந்தார்.
ஆனால் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாட்டின் தற்போதைய கிரிக்கெட் தலைவர் பாரூக் அஹமட் ஆகியோர் ஹத்துருசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.