follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP1"வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை"

“வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை”

Published on

இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கும் அதன் பின்னர் சொத்து சேதங்களை சீர்செய்வதற்கும் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மேலதிக 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, தேவையென்றால் மேலும் நிதியை ஒதுக்குமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சொத்துக்கள் முழுமையாக சேதமடையாத மக்களின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்

2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல்...

பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல்...

பாடசாலைகளின் விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...