சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதிகார சபையின் சட்ட ஆலோசனை குழு இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.
நுகர்வோர் அதிகாரசபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தள்ளார்.