follow the truth

follow the truth

April, 16, 2025
Homeவணிகம்INSEE Cement அருவாக்காட்டில் ஏற்பாடு செய்த வருடாந்த மருத்துவ முகாம் மாபெரும் வெற்றி:300 க்கும் மேற்பட்ட...

INSEE Cement அருவாக்காட்டில் ஏற்பாடு செய்த வருடாந்த மருத்துவ முகாம் மாபெரும் வெற்றி:300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்றுள்ளனர்

Published on

INSEE Cement தனது வருடாந்த மருத்துவ முகாமை அருவாக்காடு மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இது நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும் நீண்ட கால சமூக நலன் சார்ந்த முயற்சிகளில் ஒன்றாகும்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்து இருதய வைத்திய நிபுணர்,
மகப்பேற்று வைத்திய நிபுணர், பொது வைத்திய நிபுணர், நரம்பியல் வைத்திய நிபுணர், காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் மற்றும் சிறுநீரக வைத்திய நிபுணர் உட்பட மொத்தம் 11 வைத்திய நிபுணர்கள் இந்த முகாமில் தன்னார்வ சேவையை வழங்கியதுடன், பல்
சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் தனியான பல் மருத்துவ சிகிச்சையும் ஏற்பாடு செய்யப்பட்டது. புத்தளம், அருவாக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்வின் போது மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் பிற வசதிகள்
தொடர்பான அனைத்து செலவுகளுக்கும் INSEE Cement அனுசரணை வழங்கியுள்ளது.
“சமூகம் மற்றும் தொடர்புபட்ட தரப்பினருடனான ஈடுபாடு INSEE Sustainability Ambition 2030 எனப்படுகின்ற 2030 ஆம் ஆண்டை நோக்கிய அதன் நிலைபேண்தகைமை இலக்கின்
ஐந்து முக்கிய பாகங்களில் ஒன்றாக இருக்கும் அதே வேளையில், INSEE Cement நமது
புத்தளம் மற்றும் காலி சீமெந்து உற்பத்தி ஆலைகளை அண்மித்துள்ள சமூகங்களுடன் பல வருடங்களாக எண்ணற்ற சமூக அபிவிருத்தி, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் சமூக
செயற்திட்டங்கள் மூலமாக பலமான ஒருங்கிணைப்பை வளர்த்து வருகிறது,” என்று INSEE Cement நிறுவனத்தின் உற்பத்தித்துறை பணிப்பாளரான செரிஃபின் புகேஜா அவர்கள்கூறினார்.

“எங்கள் மருத்துவ முகாமின் வெற்றி மற்றும் அதற்குக் கிடைக்கப்பெற்ற
வரவேற்பை நாம் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதுடன், நாங்கள் செயல்படும் சமூகங்களின்ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்வோம், என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

INSEE Cement சமூகத்துடனான அடிமட்ட தொடர்புகளுடன், சமூகத் தலைவர்கள் மற்றும்கிராம சேவை அலுவலர்கள் போன்ற வெளிப்புற தரப்பினரை உள்ளடக்கியவாறு, INSEE நிறுவனத்தின் பல்வேறுபட்ட அணிகளையும் ஈடுபடுத்தி, உற்பத்தி ஆலை மட்டத்திலான சமூக ஆலோசனைக் குழுக்களை அமைத்துள்ளது. இந்த மருத்துவ முகாம் போன்று, சுகாதாரம், நல்வாழ்வு, கல்வி, சுத்தமான குடிநீர், ஜீவனோபாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிற செயற்திட்டங்களில் சாத்தியமான சமூகத் தேவைகளை அடையாளம் காணும் வகையில் சமூக ஆலோசனைக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...

உச்சம் தொடும் தங்க விலைகள்

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235...