follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP1இன்றும் நாடளாவிய ரீதியாக பலத்த மழைக்கு வாய்ப்பு

இன்றும் நாடளாவிய ரீதியாக பலத்த மழைக்கு வாய்ப்பு

Published on

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊடக நிறுவன பிரதானிகள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

இலங்கையில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் நாளைய தினம் (15) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்...

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது VAT வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டை விலை

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை மீண்டும் 48 ரூபாயை தாண்டியுள்ளது. சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில்...