follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுமது விற்பனை தடை செய்யப்பட வேண்டும்

மது விற்பனை தடை செய்யப்பட வேண்டும்

Published on

வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மதம் என்பது விருந்து மற்றும் குடித்து விட்டு வாழ்க்கையை வீணாக்குவது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்..

கனேமுல்ல பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்திரிகைகளில் பார்த்ததாகக் கூறிய கர்தினால், கிறிஸ்மஸ் நாளில் மதுபானம் வாழ்க்கையை அழிக்க அனுமதிப்பது செழுமையின் பார்வையா என்று கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 21 நடந்த பேரழிவுக்கான எந்த ஒரு செயலூக்கத்தையும் நாம் இன்னும் காணவில்லை.

ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை.

நாம் அரசியல் சக்திகளின் அல்லது தலைவர்களின் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது. நாங்கள் கற்பிக்கும் தத்துவம் இன்னும் உயர்ந்தது என கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை...

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...