follow the truth

follow the truth

November, 25, 2024
Homeவிளையாட்டுஇந்திய மகளிர் அணிக்கு அபார வெற்றி

இந்திய மகளிர் அணிக்கு அபார வெற்றி

Published on

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (09) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இம்முறை மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்திய அணி சார்பாக அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 52 ஓட்டங்களையும் ஸ்மிரிதி மந்தனா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து, 173 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக கவிஷா டில்ஹாரி 21 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் அஷா ஷோபனா மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL வரலாற்றில் அதிகதொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் தொடங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன...

ஐபிஎல் மெகா ஏலம் – இன்று சவுதியில்

10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஐ.பி.எல். வீரர்கள்...

மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று...