follow the truth

follow the truth

December, 22, 2024
Homeவணிகம்Hot 'N' Spicy ஆக மாறும் சனா

Hot ‘N’ Spicy ஆக மாறும் சனா

Published on

இலங்கை , கொழும்பு 2024 ஒக்டோபர் 05 : வளர்ந்து வரும் பதின்ம வயது கலைஞரான சனாவை தனது வர்த்தகநாம தூதுவர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளதாக பிறிமா கொத்துமீ (Prima KottuMee) அறிவித்துள்ளது.

அந்த வகையில் வர்த்தகநாமத்தின் இளமையான நெறிமுறைகளுடன் முழுமையாக ஒத்துப் போகின்ற, இளமையான மற்றும் திறமையான கலைஞரான சனா, பிறிமா கொத்துமீ வர்த்தகநாமத்திற்கு ஒரு புதிய மற்றும் துடிப்பான ஆளுமையைக் கொண்டு வரவுள்ளார். இசை மீதான அவரது ஆர்வம், அனைவரையும் கவரும் அவரது நடத்தை ஆகியவற்றுடன் இணைந்து, வர்த்தகநாமத்தின் Hot ‘N’ Spicy பண்புகளை வெளிப்படுத்த சனா சிறந்த தெரிவாக அமைகிறார்.

சனாவின் இசைப் பயணமானது அபாரமான பல்வேறு சாதனைகள்
நிறைந்ததாகும். வசீகரிக்கும் குரல் மற்றும் அனைவரையும் கவரக் கூடிய ஆற்றல் காரணமாக பிரபலமாக விளங்கும் அவர், இலங்கையின் இசைத்துறையில் மிக விரைவாக தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக தனது இடத்தை நிலைநிறுத்தியுள்ள அவரின் முதல் பாடலான, “சந்தக் வெலா”, 6 வாரங்களுக்கும் மேலாக யூடியூப்பில் டிரெண்டிங் வரிசையில் இடம்பித்துள்ளது. அது தற்போது 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையிடல்களை கொண்டுள்ளது. இந்த பாடல் அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் பிரபல பாடல்கள் பட்டியலில் இடம்பித்துள்ளமையானது, சர்வதேசத்தில் வளர்ந்து வரும் அவரது இடத்தை நிரூபிக்கிறது.

பிறிமா ஸ்ரீலங்கா குழுமத்தின் சிலோன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் மத்தியில் துடிப்பான உணர்வை ஏற்படுத்தும் சனா போன்ற வளர்ந்துவரும் இளம் கலைஞர்களை ஆதரிப்பதற்கும் அவர்களை வளர்ப்பதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பிறிமா கொத்துமீ ஆனது, இளைஞர்களின் அபிலாஷைகளை எதிரொலிக்கும் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்கள் மீது எப்போதும்
நம்பிக்கை வைத்துள்ளது. சனாவுடனான இந்த ஒத்துழைப்பானது பிறிமா கொத்துமீ வர்த்தகநாமத்தின், அனைவரையும் உள்ளீர்க்கும் துடிப்பான மற்றும் இளமையான ஆற்றலுக்கு மேலும் பங்களிக்கும் என்பதோடு, இளைய தலைமுறையினரின் உணர்வை எதிரொலிப்பதன் மூலம் எமது வர்த்தகநாமத்தை புதுமையாகவும் பொருத்தமானதாகவும் பேணும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

வர்த்தகநாம தூதுவராக பிறிமா கொத்துமீயுடன் இணையும் சனாவின் ஈடுபாடானது, ஒரு அற்புதமான நேரத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வர்த்தகநாமம் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான தயாரிப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ள நிலையில், சனாவின் ஆளுமையானது இதை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும். இளைய நுகர்வோருடன் இணைவதற்கும், இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய
வர்த்தகநாம அனுபவத்தை உருவாக்குவதற்குமான வர்த்தகநாமத்தின் முயற்சிகளுக்கு, அவரது இணைவானது முக்கிய பங்களிப்பை வழங்கும். ஏற்கனவே தமது வர்த்தகநாம தூதுவர்களாக இணைந்துள்ள, உலகளாவிய பாடும் நட்சத்திரம் யொஹானி மற்றும் அஷன்யா ஆகியோருடன் இணைந்து அவர் பணியாற்றுவார். இவர்கள் அனைவரும் தங்களுடைய
தனிப்பட்ட பாணியையும் கவரும் திறமைகள் மூலமும், வர்த்தகநாமத்தின் ‘Hot N Spicy’ உணர்வைமுழு வச்ீசில் மேம்படுத்த உள்ளனர்.

Picture Caption:
இடமிருந்து வலமாக – Prima Group Sri Lanka குழுமத்தின் Ceylon Agro Industries Ltd சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஹிம்பா குணவர்தன, Prima Group Sri Lanka குழுமத்தின் Ceylon Agro Industries Ltd சர்வதேச சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டு தலைவர் அச்சலா ரமநாயக்க, சனா, Prima Group Sri Lanka குழுமத்தின் Ceylon Agro Industries Ltd பொது முகாமையாளர் சஜித் குணரத்ன, Prima Group Sri Lanka குழுமத்தின் Ceylon Agro Industries Ltd சிரேஷ்ட வர்த்தக முகாமையாளர் டொனவன் ஒண்டாஜ்ஜே

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...