துனீஷியா ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, இரண்டாவது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிஷீயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் வெறும் 28.8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 90.69 சதவிகித வாக்குகளை கையிஸ் சையத் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.