follow the truth

follow the truth

April, 24, 2025
Homeஉள்நாடுஉபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

Published on

ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பல்லேகல மைதானத்தில் முடிவடைந்த “லெஜண்ட் டிராபி 2024” கிரிக்கெட் போட்டியின் பணத்தில் செல்வாக்கு செலுத்தியதாக அவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யோகி பட்டேல் தன்னை ஏமாற்றப் பரிந்துரைத்ததாக உபுல் தரங்க விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இன்று அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவிருந்த நிலையில், தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க, நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் அமெரிக்க தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி செல்லும் விசேட ரயில்களும் நிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் இன்று (24) முதல் மறு அறிவிப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம்...

டயனாவின் விசா வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க...