follow the truth

follow the truth

October, 8, 2024
HomeTOP1அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

Published on

தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சில நாடுகளில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுமா என ஜனாதிபதி குறித்த சங்கத்திடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம், இதுவரையில் தமது இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுவரி ஆணையாளர் நாயகத்தின் சேவை நிறைவு

மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அநுர...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடவுள்ளது. அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா...

கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ள கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவொன்று வெளிநாடு செல்லத்...