follow the truth

follow the truth

October, 8, 2024
HomeTOP1போலிச் செய்தி குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

போலிச் செய்தி குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Published on

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசின் கொள்கையை விளக்கிய அமைச்சரவைப் பேச்சாளர்

இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை...

மதுவரி ஆணையாளர் நாயகத்தின் சேவை நிறைவு

மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அநுர...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடவுள்ளது. அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா...